தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட 1971 ஆம் ஆண்டு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்  நிறுவப்பட்டது.  இளங்கலை பட்டைய படிப்பு (தோட்டக்கலை) 1972 ஆம் ஆண்டு  முதல் தொடங்கப்பட்டது.  பின்னர் 1990 இல், இப்பட்டைய படிப்பு பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றப்பட்டது.  இளங்கலை தொழில் நுட்ப தோட்டக்கலை பட்டயபடிப்பு  2002 ம் ஆண்டு முதல் 2017 வரை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்பட்டது. இளங்கலை பட்டைய படிப்பு (தோட்டக்கலை) 2018 ஆம் ஆண்டு  முதல் இக்கல்லூரியில் மீண்டும் தொடங்கப்பட்டது.  இக்கல்லூரியில் இருந்து தோட்டக்கலை படிப்புகளை கற்பிக்க ஐந்து துறைகள் செயல்பட்டு வருகிறது.  அவைகள் பழப்பயிர்கள் துறை, காய்கறிப்ப பயிர்கள் துறை, வாசனை மற்றும் மலைத்தோட்டப்பயிர்கள் துறை . மலர்கள் மற்றும் நிலம்எழிலூட்டும் துறை மற்றம் மருந்து மற்றும் நறுமணப்பயிர்கள் துறை. மேலும்,  கிராமப்புற மாணவர்களின்  நலனுக்காக  கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,  தோட்டக்கலை கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் இளங்கலை பட்டயப்படிப்பு (தோட்டக்கலை) தமிழ் வழி மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நோக்கம்

தோட்டக்கலையில் இளங்கலை பட்டயப்படிப்பு

நான்கு ஆண்டு இளங்கலை   பட்டயப்படிப்பு எட்டு பருவங்களில்  நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் தோட்டக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இப்பாடத்திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களின் தேவைக்கேற்ப திருத்தி அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இப்பட்டப்படிப்பின் மொத்த பாட கடன் நேரம் 180 யை  எட்டு  பருவங்களாக வழங்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு பருவத்தின்   தொடக்கத்திலும்  கல்வி நாட்காட்டி 105 நாட்களை உள்ளடக்கி  தயாரிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. இந்நாட்காட்டியின் படி, 52வது வேலை நாளில் இடைப்பருவத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இறுதி செய்முறைத் தேர்வு 91 வது வேலை நாளில் தொடங்குகிறது.  ஒவ்வொரு பருவமும் கடைசி வேலை நாள் 105 வது நாளில் வருகிறது.  ஐந்தாவது முதன்மையர் குழுவின் பரிந்துரையின் படி. பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு  பின்பற்றப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு பாடப்பிரிவுகளும் அந்தந்த துறையால் வழங்கப்பட்டு,  அத்துறைத் தலைவர்களால்  கண்காணிக்கப்படுகிறது,

சேர்க்கை மற்றும் விண்ணப்பம்

சேர்க்கை பற்றி மேலும் அறிய https://www.tnau.ac.in/ugadmi பக்கத்தைப் பார்வையிடவும்

மாணவர்களின் அனுபவங்கள்

இப்பட்டப்படிப்பு பற்றிய மாணவர்களின் ஒட்டு மொத்த கருத்து மிகவும் உயர்ந்ததாக உள்ளது.  இப்பட்டையப் படிப்பு முடித்த மாணவர்கள் மாநில தோட்டக்கலைத் துறையில் இருபது சதவிகிதமும்  (20%) – தொழில் முனைவேராக பதினெய்ந்து சதவிகிதமும்  (15%)  நிலப்பரப்பு தோட்டக்கலை நிபுணராக (குவைத், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மணி) தோட்டக்கலை  ஆலோசகர்   போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்றுவருகின்றனர்.  உயர் படிப்புகள் அதாவது முதுநிலை மந்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்பில் இந்திய அளவில்  மற்றும் சர்வதேச அளவில் (டெக்சாஸ் பல்கலைக்கழகம், யுஎஸ் எடி.என் பார்க் பல்கலைக்கழகம், மேற்கு ஆஸ்திரேலியாவின் யுகே பல்கலைக்கழகம், ஐஐஎம். லக்னோ மற்றும் ஐஐஎம் பெங்களுர் ஆகியவற்றில் பயின்று வருகின்றனர்

எதிர்கால வேலைவாய்ப்பு

தேசிய மற்றும் சர்வதேச அளவில்

முதுநிலை பட்டயப்படிப்பு

Application Process:

School of Postgraduate Studies
Tamil Nadu Agricultural University
Coimbatore-641003,
Tamil Nadu, India.
Phone: +91 422 6611461, 261
Fax: +91 422 6611343